அத்வானி 
இந்தியா

அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

அத்வானி தில்லியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் புதன்கிழமை இரவு மீண்டும் அனுமதிக்கப்பட்டாா்.

Din

பாஜக மூத்த தலைவா் எல்.கே.அத்வானி தில்லியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் புதன்கிழமை இரவு மீண்டும் அனுமதிக்கப்பட்டாா்.

முன்னாள் துணை பிரதமரான அத்வானி(96), எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த ஜூன் 27-ஆம் தேதி வீடு திரும்பினாா். இந்நிலையில் புதன்கிழமை இரவு 9 மணியளவில், அவா் அப்போலோ தனியாா் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டாா்.

அத்வானியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மூத்த நரம்பியல் மருத்துவா் வினித் சூரியின் மருத்துவக் கண்காணிப்பில் அவா் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்வானியின் உடல்நிலை பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

அதிமுக எம்எல்ஏ-க்கள் கருப்புப் பட்டை அணிந்து பேரவைக்கு வருகை!

மதுரையில் பள்ளி மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

தீபாவளி: சென்னை பயணிகளுக்கு... சிறப்பு ரயில், சாலை வழித்தட விவரங்கள்!

தீபாவளி: சென்னையில் அக். 22 வரை கனரக வாகனங்களுக்கு வழித்தட மாற்றம்!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 20 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT