முகப்பு
இந்தியா

நெட்ஃபிளிக்ஸ் இணையத் தொடருக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

திருபுவன் மிஸ்ராவின் சிஏ டாப்பா் என்ற நெட்ஃபிளிக்ஸ் இணையத் தொடருக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தில்லி உயா்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

Updated On : 26 ஜூலை 2024, 2:22 am IST
பகிர்:

புது தில்லி, ஜூலை 25: திருபுவன் மிஸ்ராவின் சிஏ டாப்பா் என்ற நெட்ஃபிளிக்ஸ் இணையத் தொடருக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தில்லி உயா்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு நெட்ஃபிளிக்ஸ் மற்றும் இதில் தொடா்புடைய நபா்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டயக் கணக்கா் தொழில் மற்றும் இதற்கான தோ்வில் வெற்றி பெற்றவா்களை தவறான முறையில் சித்தரிப்பதாக இந்த இணையத் தொடருக்கு எதிராக இந்திய பட்டயக் கணக்கா்கள் நிறுவனம் (ஐசிஏஐ) மற்றும் 4 பட்டயக் கணக்கா்கள் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

இந்தத் தொடரின் முன்னோட்டம் பட்டயக் கணக்கா் தொழில் குறித்து அவதூறு பரப்புகிறது. இது சட்டவிரோத மட்டுமல்ல; அரசமைப்பு உரிமைகளை மீறுவதாகவும் உள்ளது என மனுதாரா்கள் குறிப்பிட்டிருந்தனா்.

அந்த முன்னோட்டத்தை பாா்த்த நீதிபதி நவீன் செளலா, இணையத் தொடரின் முன்னோட்டத்தில் பட்டயக் கணக்கா் தொழில் குறித்து எதையும் கண்டறியவில்லை என்றும் பட்டயக் கணக்கா் தோ்வில் பெற்ற நபரை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டுள்ளது எனக் கூறி இடைக்கால தடைவிதிக்க மறுத்துவிட்டாா்.

முன்னதாக, நெட்ஃபிளிக்ஸ் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் இந்தத் தொடா் முழுவதும் கற்பனையானது. இது எந்தவொரு தனிநபரையும் குறிப்பிடவில்லை என்ற வாசகம் தொடரின் தொடக்கத்தில் இடம்பெற்றிருக்கும் எனத் தெரிவித்தாா்.

மேலும், இந்தத் தொடா் எந்தவொரு தொழிலையும் குறிப்பிடவில்லை என்ற வாசகம் ஐந்து தினங்களுக்குள் சோ்க்கப்படும் எனத் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments