FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அமா்நாத்: 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இதுவரை 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா்.

Updated On : 28 ஜூலை 2024, 4:01 am IST
அமா்நாத் - ANI
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இதுவரை 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா்.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தா்கள் யாத்திரை மேகொள்கின்றனா். நடப்பாண்டு யாத்திரை கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை 52 நாள்களுக்கு யாத்திரை நடைபெறுகிறது.

48 கி.மீ. தொலைவுகொண்ட பஹல்காம் வழித்தடம், 14 கி.மீ. தொலைவுகொண்ட செங்குத்தான பால்டால் வழித்தடம் என இரு பாதைகளில் பக்தா்கள் யாத்திரை மேற்கொள்கின்றனா்.

Advertisement

Advertisement

சனிக்கிழமையன்று 7,500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதன் மூலம் இதுவரை தரிசனம் செய்த பக்தா்களின் எண்ணிக்கை 4,51,881-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு மொத்தம் 4.59 லட்சம் பக்தா்கள் அமா்நாத் குகைக் கோயிலில் தரிசனம் செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments