தேர்தல் முடிவுகள்: 150 ஆட்சியர்களுடன் அமித் ஷா பேசியுள்ளார்! காங். குற்றச்சாட்டு
தேர்தல் முடிவுகளில் மாற்றங்களை மேற்கொள்ள ஏதுவாக 150 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்துள்ளார் அமித் ஷா
நாடாளுமன்றத்தின் 543 மக்களவை தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், தேர்தல் முடிவுகளில் மாற்றங்களை மேற்கொள்ள ஏதுவாக அமித் ஷா 150 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்துள்ளார் என பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.
Advertisement
Advertisement
அரசு அதிகாரிகள் எவ்வித அழுத்தத்துக்கும் ஆளாகாமல் அரசமைப்பை நிலைநிறுத்த வேண்டுமென கூறியுள்ள அவர், ஜூன் 4-அம் தேதி மக்களே வெற்றி பெறுவர் எனவும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.