முகப்பு
இந்தியா

கருணாநிதிக்கு பிரதமர் மோடி புகழாரம்

இந்தியா

கருணாநிதிக்கு பிரதமர் மோடி புகழாரம்

Updated On : 3 ஜூன், 2024 at 9:58 AM
பகிர்:

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கருணாநிதியின் 100வது பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தன்னுடைய நீண்ட நெடிய பொது வாழ்க்கையில் தமிழகத்திற்கும், தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் பணியாற்றியவர் கருணாநிதி.

நானும் கருணாநிதியும் முதல்வர்களாக இருந்தபோது அவருடன் நடத்திய உரையாடல்களை நினைவுகூருகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் இன்று (ஜூன் 3-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சோனியா காந்தி, ராகுல் காந்தி, பரூக் அப்துல்லா, சீதாராம் யெச்சூரி, டி. ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தற்போது அவர்களைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், கருணாநிதியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவரை நினைவுகூர்ந்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →