பிரதமர் மோடியை வழியனுப்பிவைத்த முதல்வர் விஜய்!
சென்னையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைத்த பிறகு புறப்பட்டுச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் வழியனுப்பி வைத்தது குறித்து...
சென்னையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைத்த பிறகு புறப்பட்டுச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய், விமான நிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்தார்.
மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 11) சென்னை வந்தார். தில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, விமான நிலையத்துக்குச் சென்று முதல்வர் சி. ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, ரூ. 4,900 கோடியில் கட்டப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டமான பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் விஜய் ஆகிய இருவரும் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
தொடர்ந்து, போரூர் புறவழிச்சாலை நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பிரதமர் மற்றும் முதல்வர் இருவரும் பயணித்தனர்.
மேலும், சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மையதானத்தில் ரூ. 13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கியும் வைத்தார்.
இதன் பிறகு, சென்னை வர்த்தக மையத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் பொன்விழாவில் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தில்லிக்குப் புறப்பட்டார். அவரை தமிழக முதல்வர் விஜய், விமான நிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்தார்.
Chief Minister Vijay saw off Prime Minister Modi in chennai airport
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.