மேக்கேதாட்டு: நவ. 16-இல் பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்?
பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்திப்பது குறித்து...
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும்நிலையில், அணை கட்ட உரிய அனுமதி வேண்டும் என பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் நேரில் சந்தித்துப் பேசினார்.
Advertisement
Advertisement
மேலும், மேக்கேதாட்டு அணையால் தமிழகம் பயனடையும் என்றும், அணை கட்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய்யும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகிற திங்கள்கிழமையில் (நவ. 16) தில்லி செல்லும் முதல்வர் விஜய், பிரதமர் மோடியை சந்தித்து மேக்கேதாட்டு அணையால் தமிழகம் பாதிக்கப்படுவதை விளக்குவார் எனக் கூறப்படுகிறது.