சென்னையில் பிரதமர் மோடி - செய்திகள் நேரலை!
ரூ. 13,000 கோடி வளா்ச்சித் திட்டங்கள்! சென்னையில் பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்!

சென்னை விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்கும் முதல்வர் விஜய்!
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் சி. ஜோசப் விஜய் விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார்.
சென்னையில் பிரதமர் மோடி சாலைவலம்!
சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு பொதுமக்கள், பாஜக தொண்டர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடி, முதல்வர் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தை தொடங்கி வைத்த நரேந்திர பிரதமர் மோடி, முதல்வர் விஜய் அதில் பயணித்தனர்.
Advertisement
Advertisement
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்!
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டமான பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக். 11) தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய்யும் பங்கேற்றார்.
பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கிய முதல்வர் விஜய்!
புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்தை தொடக்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் சி. ஜோசப் விஜய் நினைவுப் பரிசை வழங்கினார்.
சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்!
சென்னை ஐஐடியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகம் முழுக்க வளர்ச்சி தேவை!
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டமான பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 11) தொடக்கி வைத்தார்.
1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்
கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை!
முதல்வர் விஜய்யோடு இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர், பாரதியாரை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர்!
சென்னையில் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திருவள்ளுவரையும் பாரதியாரையும் மேற்கோள் காட்டி மாணவர்களுடன் உரையாற்றினார்.
நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்!
நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 5 ஆயிரத்துக்கும் அதிகமான கல்லூரிகள் உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 11) மாணவர்கள் முன்பு பேசினார்.
நாட்டின் எதிர்கால நாயகர்கள் மாணவர்கள்தான் என்றும் மாணவர்களின் திறன் மற்றும் செயல்பாடுகள் மீது நம்பிக்கை உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
சென்னையில் இருந்து புறப்பட்டார் பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் புதுதில்லிக்குப் புறப்பட்டபோது, சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் வழியனுப்பி வைத்தார்.