FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னை விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்கும் முதல்வர் விஜய்!

விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் முதல்வர் விஜய்.

11 அக்டோபர் 2026, 8:31 am IST
முதல்வர் விஜய் - பிரதமர் மோடி - (கோப்புப்படம்)
பகிர்:

சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் சி. ஜோசப் விஜய் விமான நிலையத்துக்கு சென்று வரவேற்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

பிரதமர் மோடியின் சென்னை ஐஐடி நிகழ்ச்சி தவிர்த்து, இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளில், முதல்வர் விஜய் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்துக்கு ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பணிகள் நிறைவடைந்த திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இன்று (அக். 11) தொடக்கி வைக்கிறார்.

Advertisement

Advertisement

இதற்கான நிகழ்வுகளில் பங்கேற்க தில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு காலை 11.30 மணியளவில் பிரதமா் மோடி வருகிறார். ரூ.4 ,900 கோடியில் கட்டப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டமான பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்தை பிரதமர் தொடக்கி வைக்கிறார்.

மேலும், போரூர் புறவழிச்சாலை நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பிரதமர் பயணிக்கிறார். இதில் தமிழக முதல்வர் விஜய்யும் பங்கேற்கிறார். பின்னர், நண்பகல் 12.15 மணியளவில், சென்னை ஐஐடிக்கு பிரதமா் மோடி வருகிறார். அங்குள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்கிறார். தொடர்ந்து, சென்னை ஐஐடியில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தை அவா் பாா்வையிடுவார்.

பின்னர், பிற்பகல் 1.30 மணியளவில் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மையதானத்தில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தும், நாட்டுக்கு அர்ப்பணித்தும் பிரதமா் மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்விலும் முதல்வா் விஜய் பங்கேற்கிறார்.

சென்னை வர்த்தக மையத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் பொன்விழாக் கொண்டாட்டங்களிலும் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளார்.

summary

Reports indicate that Chief Minister C. Joseph Vijay will go to the airport to welcome Prime Minister Narendra Modi upon his arrival in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments