FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டும் பாஜகவை முந்த முடியவில்லை -பிரதமர் மோடி

பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

5 ஜூன் 2024, 3:13 am
- படம் | பிடிஐ
பகிர்:

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், பாஜக மற்றும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து,புதுதில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை(ஜூன் 4) மாலை நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ”எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டும் கூட, பாஜக தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்றுள்ள எண்ணிக்கையை அவர்களால் பெற முடியவில்லை.

1962க்கு பின் ஒரே கட்சி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்கிறது.

பிற நாடுகளில் உள்ள மக்கள் தொகையை விட, இந்தியாவில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

பாஜக தலைமையிலான 3வது முறை ஆட்சியில், முக்கியமான மாபெரும் முடிவுகள் எடுக்கப்பட் உள்ளன. ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது, மோடியின் உத்தரவாதம்!

நீங்கள் 10 மணி நேரம் பணியாற்றினால், மோடி 18 மணி நேரம் பணியாற்றுவேன். நீங்கள் 2 அடி எடுத்து வைத்தால், மோடி 4 அடி எடுத்து வைத்து, நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வேன்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.