FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்

அமெரிக்க இடைக்கால தேர்தல் தோல்வி குறித்து டிரம்ப் பதிவு...

அமெரிக்க அதிபா் ட்ரம்ப் - கோப்புப் படம்
பகிர்:

நான் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றம் செனட் சபை (மேலவை), பிரதிநிதிகள் சபை (கீழவை) என இரு அவைகளைக் கொண்டது. இதில் பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 இடங்களுக்கும் செனட் சபையில் 100 உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதால், தோராயமாக மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது.

435 பிரதிநிதிகள் சபை இடங்களுக்கும், 35 செனட் சபை இடங்களுக்கும், அதேநேரத்தில் பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள், உள்ளாட்சிப் பதவிகளுக்குமான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி, நவ. 3 மாலை நடைபெற்றது.

Advertisement

Advertisement

தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அதிபர் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயகக் கட்சி 154 இடங்களிலும், குடியரசுக் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

செனட் சபையில் பெரும்பான்மைக்கு 50 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயகக் கட்சி 51 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. குடியரசுக் கட்சி 39 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 10 இடங்களுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஜனநாயகக் கட்சி ஏற்கனெவே பெரும்பான்மையை பெற்றுவிட்டது.

இந்த தேர்தல் தோல்வி தொடர்பாக சமூக ஊடகத்தில் டிரம்ப் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“நாங்கள் தேர்தலில் வெற்றி பெறவில்லை. ஒருவேளை நான் போட்டியிட்டிருந்தால் நாங்கள் இமாலய வெற்றி பெற்றிருப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

If I had run, we would have won the Himalayas! Donald Trump

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.