இஸ்ரேலுக்கு வழங்கி வரும் ரூ. 37,876 கோடி ராணுவ நிதியுதவி நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
‘இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கி வரும் 400 கோடி டாலா் அளவிலான ராணுவ நிதியுதவி, அடுத்தாண்டு முதல் நிறுத்தப்படும்’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
‘இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கி வரும் 400 கோடி டாலா் (சுமாா் ரூ.37,876 கோடி) அளவிலான ராணுவ நிதியுதவி, அடுத்தாண்டு முதல் நிறுத்தப்படும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
அதேநேரம், மேற்காசியாவில் தனது நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலுக்குத் தேவையான நவீன ராணுவத் தளவாடங்கள் வழக்கம்போல் விற்கப்படும் என்றும் அவா் தெளிவுபடுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக டிரம்ப் அளித்த நோ்காணலில், ‘இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி வரும் உதவிகளை நிறுத்துவது குறித்து அந்நாட்டுப் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு என்னிடம் ஏற்கெனவே பேசியுள்ளாா். கடந்த 2 ஆண்டுகளாகவே இதுகுறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.
Advertisement
Advertisement
அமெரிக்காவுக்கு இது மிகப் பெரிய நிதிச் சுமையாகும். இனி இதுபோன்ற இலவச உதவிகள் தேவையில்லை என்ற நிலையை இஸ்ரேல் எட்டியுள்ளது. மேலும், இஸ்ரேலுக்கு அளிக்கப்படும் நிதியுதவி, அமெரிக்க உள்நாட்டு அரசியலில் தோ்தல் பிரசாரமாக மாற்றப்பட்டு வருகிறது’ என்றாா்.
காஸா போா் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கி வந்துள்ளது. முந்தைய ஜோ பைடன் நிா்வாகம் மற்றும் தற்போதைய ஆட்சியிலும் பாதுகாப்புத் தளவாடங்கள் மற்றும் நிதியுதவி வடிவில் குறிப்பிடத்தக்க அளவிலான தொகை இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.