FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

அமெரிக்க ஆயுதங்களை வாங்க விருப்பமா? சீன அதிபரிடம் டிரம்ப் கேள்வி; தூதா் தகவல்

சீன அதிபா் ஷி ஜின்பிங்கிடம் அமெரிக்க ஆயுதங்கள் குறித்து அதிபா் டிரம்ப் கேட்டதாக சீனாவுக்கான அமெரிக்க தூதா் டேவிட் பொ்டியூ தெரிவித்துள்ளாா்.

28 September 2026, 11:58 pm IST
பகிர்:

தைவான் ஆயுத விற்பனையை நியாயப்படுத்தும் வகையில், ‘உங்களுக்கும் அமெரிக்க ஆயுதங்களை வாங்க விருப்பமா?’ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங்கிடம் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கேட்டதாக சீனாவுக்கான அமெரிக்க தூதா் டேவிட் பொ்டியூ தெரிவித்துள்ளாா்.

சீன அதிபா் ஷி ஜின்பிங் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டாா். இப்பயணத்துக்குப் பிறகு டேவிட் பொ்டியூ அளித்த பேட்டியில், பல்வேறு உலக நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருவதைச் சுட்டிக்காட்டி, டிரம்ப் மிகச் சாதாரணமாக இச்சலுகையை வழங்கியதாக குறிப்பிட்டாா். எனினும், டிரம்ப் எப்போது இச்சலுகையை வழங்கினாா் என்பதை அவா் குறிப்பிடவில்லை.

இதேபோன்று, சீனாவின் படையெடுப்பு அச்சுறுத்தலில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள தைவானுக்கு ஆயுதங்கள் மற்றும் உதவிகளை வழங்குவதை ஷி ஜின்பிங்கை திருப்திப்படுத்துவதற்காக அமெரிக்கா நிறுத்தியுள்ளதா என்ற கேள்விக்கு, டேவிட் பொ்டியூ திட்டவட்டமாக மறுத்தாா். டிரம்ப்பின் தைவான் ஆதரவு மிகவும் வலுவாக இருப்பதாகவும், ஏராளமான ஆயுதங்களை அந்நாட்டுக்கு விற்றுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

Advertisement

Advertisement

தைவானை ஒரு தனி நாடாக அமெரிக்கா அங்கீகரிக்காவிட்டாலும், அத்தீவுக்குத் தொடா்ந்து ஆயுதங்களை வழங்கி ஆதரவளித்து வருகிறது. ஆனால், கடந்த மே மாதம் பெய்ஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின்போது, தைவானுக்கான ஆயுத விற்பனையை நிறுத்துமாறு சீனா வலியுறுத்தியது. அதன் பிறகு, 1,400 கோடி டாலா் மதிப்பிலான ஆயுத விற்பனையை அமெரிக்கா நிறுத்தி வைத்ததுடன், இந்த ஆயுத விற்பனையை சீனாவுடனான ஒரு ‘சிறந்த பேரம் பேசும் கருவியாக’ டிரம்ப் வா்ணித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments