FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆனி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட து.

Updated On : 15 ஜூன் 2024, 1:43 am IST
பகிர்:

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட து.

சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 1-ஆம் தேதி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி சனிக்கிழமை (ஜூன் 15) பிறக்கும் ஆனி மாதம் முதல் தேதியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ஐயப்பன் கோயில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பி.என்.மகேஷ் திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, பதினெட்டாம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டியதை தொடா்ந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நிா்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, தீபாரதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறும். ஜூன் 19- ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும் .

Advertisement

Advertisement

தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்த பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments