FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பவன் கல்யாண்!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை பவன் கல்யாண் சந்தித்தார்.

18 ஜூன் 2024, 7:40 pm
சந்திரபாபு நாயுடுவுடன் பவன் கல்யாண். - படம்|பிடிஐ
பகிர்:

ஆந்திரத்தின் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை துணை முதல்வர் பவன் கல்யாண் செவ்வாக்கிழமை சந்தித்தார்.

தலைமைச் செயலகத்திற்கு சென்ற பவன் கல்யாண் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைகளை ஆய்வு செய்தார்.

Advertisement

Advertisement

முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்துராஜ் துறைகள் குறித்து கேட்டறிந்தார்.

7 ஆண்டுகளுக்கு பின்னர் பவன் கல்யாண் தலைமைச் செயலகத்திற்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

வரவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் மற்றும் அதில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

- படம்|பிடிஐ

பவன் கல்யாண் முதல்வர் அறையில் உள்ள அரசின் அதிகாரபூர்வ சின்னத்தை சுட்டிக்காட்டி, சந்திரபாபு நாயுடுவை கௌரவித்ததற்காக பாராட்டினார்.

துணை முதல்வர் பவன் கல்யாண் அனைத்து அறைகளையும் ஆய்வு செய்தார். அவரது கட்சி அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் அறைகளின் 'வாஸ்து' முறைகள் குறித்தும் அவர் குறிப்பிட்டதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ரோஜாவின் அறை, சுற்றுலாத்துறை அமைச்சர் கண்டுளா துர்கேஷுக்கு ஒதுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.