அவசர நிலை குறித்த தகவல் பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும் -வெங்கையா நாயுடு
மாணவர்களுக்கு அவசர நிலை குறித்து கற்பிக்கப்பட வேண்டும் - முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தல்
பள்ளிப் பாடப் புத்தகங்களில் அவசர நிலை குறித்த தகவல் சேர்க்கப்பட்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி ஆட்சியில் அவசர நிலை அமல்படுத்தி 50 ஆண்டுகள் ஆவதை நினைவுகூா்ந்து பேசிய முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, “அவசர நிலை என்றால் என்ன? எதெற்காக அவசர நிலை அமல்படுத்தப்பட்டது? எப்படி நடைமுறைப்படுத்தப்பட்டது? ஜெய்பிரகாஷ் நாராயணன் இயக்கம் என்றால் என்ன? நாட்டில் அதனால் ஏற்பட்ட தாக்கம் ஆகியவை குறித்து மாணவர்களுக்காக பாடப்புத்தகங்களில் பாடம் இடம்பெற்றிருக்க வேண்டும். இது கல்வியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தும் இதுபோன்ற சக்திகள் பதற்றத்தை உருவாக்குபவை. நமக்கு பதற்றம் ஏற்பட்டால் நம்மால் எதிலும் கவனம் செலுத்த முடியாது. இதுபோன்ற சக்திகளிடமிருந்து இளம் தலைமுறையினர் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.