முகப்பு
இந்தியா

கேஜரிவால் கைது: நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப இந்தியா கூட்டணிக்கு வேண்டுகோள்

விசாரணை அமைப்புகளைத் தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை குறிவைக்கிறது பாஜக என்றார் சஞ்சய் சிங்.

Updated On : 26 ஜூன் 2024, 9:50 pm IST
சஞ்சய் சிங்
பகிர்:

அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு ஆம் ஆத்மி வேண்டுகோள் விடுத்துள்ளது.

விசாரணை அமைப்புகளைத் தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து தாக்கிவருவது குறித்து அவையில் கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக அவரின் இல்லத்தில் சோதனை நடத்தி அமலாக்கத் துறையினர் அரவிந்த் கேஜரிவாலை கைது செய்து திகார் சிறையில அடைத்தனர்.

Advertisement

Advertisement

சிறையில் உள்ள கேஜரிவால் ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. எனினும் அமலாக்கத் துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஜாமீனுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கேஜரிவால் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், திகார் சிறையில் உள்ள கேஜரிவாலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங், ''அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக செயல்படுத்தப்படுகிறது.

தில்லி கூட்டணி கட்சித் தலைவர்களிடம் இது குறித்து பேசவுள்ளேன். நாடாளுமன்றத்தில் கேஜரிவால் கைது குறித்து பேச அவர்களிடன் வேண்டுகோள் வைக்கவுள்ளேன். மற்ற எதிர்க்கட்சி தலைவர்களிடமும் இது குறித்து பேசவுள்ளோம். உத்தவ் தாக்கரேவிடம் பேசினோம். காங்கிரஸ் தலைவர்களிடமும் பேசி வருகிறோம்.

மாநில அளவில் வேறுபட்டிருந்தாலும், அரசியலமைப்பு, ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தேசிய அளவில் நாம் ஒன்றிணைந்துள்ளோம்.

சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கேஜரிவால் விவகாரத்தில் ஆதரவு தெரிவித்து அவையில் குரல் எழுப்பினர்.

விசாரணை அமைப்புகளைத் தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து தாக்கிவருகிறது பாஜக அரசு'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.