FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இளம்பெண் பாலியல் வன்கொடுமை: வெளியான விடியோ!

முசாபர்நகரில் கொடூரம்: 16 வயது பெண்ணுக்கு வன்கொடுமை, வீடியோ ஆன்லைனில்

Updated On : 20 மார்ச் 2024, 3:58 pm IST
பகிர்:

உத்தர பிரதேசம் முசாபர்நகர் பகுதியில் 16 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அந்த விடியோவை ஆன்லைனில் பதிவேற்றிய நபரைத் தேடிவருவதாக காவலர்கள் தெரிவித்தனர்.

குற்றவாளி வாஸீம் என்பவர். இளம்பெண்ணை கரும்பு தோட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் அதனை கேமராவில் பதிவு செய்ததாகவும் வட்டார காவல் அதிகாரி ராஜ்குமார் சேவ் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரில், வாஸீம், இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் விடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என பெண்ணை மிரட்டியதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

அதனால் அந்த பெண் இந்த நிகழ்வை யாரிடமும் சொல்லவில்லை. பின்னர் வாஸீம் அவர் பதிவு செய்த விடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

காவல்துறையினர், குற்றவியல் சட்டப் பிரிவு 376 மற்றும் ஆன்லைன் குற்றங்கள் சட்டத்தின்கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

தலைமறைவான குற்றவாளியைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என காவலர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments