42,200 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்த என்டிபிசி!
மின் உற்பத்தியில் என்டிபிசி சாதனை; நிதியாண்டில் 6% வளர்ச்சி!
புதுதில்லி: பொதுத் துறை மின் நிறுவனமான என்.டி.பி.சி. நிறுவனம், 2023-24ஆம் நிதியாண்டில் 42,200 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்தது.
2023-24ஆம் ஆண்டில், என்டிபிசி நிலக்கரி நிலையங்கள் 77 சதவிகித திறன் பயன்பாட்டைப் பதிவு செய்துள்ளதாக என்டிபிசி தனது அறிக்கையில் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி லிமிடெட், 2023-24ஆம் ஆண்டில் 42,200 கோடி யூனிட்களை உற்பத்தி செய்துள்ள நிலையில், இது 2022-23ஆம் ஆண்டை விட 6 சதவிகித வளர்ச்சியாகும். அதே வேளையில் நிறுவனமானது செப்டம்பர் 01, 2023 அன்று 1,42,800 கோடி யூனிட்களை ஒரே நாளில் உற்பத்தி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.