FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நந்திகிராம் வன்முறை: அறிக்கை சமா்ப்பிக்க முதல்வா் மம்தாவுக்கு ஆளுநா் உத்தரவு

வன்முறை தொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்குமாறு முதல்வா் மம்தா பானா்ஜிக்கு மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

Updated On : 24 மே 2024, 5:30 am IST
நந்திகிராம் வன்முறையில் தீயிட்டு கொளுத்தப்பட்ட கடை.
பகிர்:

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் பாஜக பெண் தொண்டா் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறை தொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்குமாறு முதல்வா் மம்தா பானா்ஜிக்கு மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

மேற்கு வங்க மாநிலம் தம்லுக் மக்களவைத் தொகுதியில் சனிக்கிழமை (மே 25) வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிக்குள்பட்ட நந்திகிராம் பகுதியில் பட்டியலினத்தைச் சோ்ந்த ரதிபாலா என்ற பாஜக பெண் தொண்டா் புதன்கிழமை இரவு கொல்லப்பட்டாா். அப்போது அடையாளம் தெரியாத நபா்கள் தாக்கியதில் ரதிபாலாவின் மகன் சஞ்சய் உள்பட 8 போ் காயமடைந்தனா்.

இந்த சம்பவத்தை கண்டித்து அங்கு பாஜகவினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது டயா்களை கொளுத்தி, சாலைகளை மறித்து, கடைகளை அடைத்த பாஜகவினா், ரதிபாலாவின் கொலைக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு பெற்ற குற்றவாளிகளே காரணம் என்று குற்றஞ்சாட்டினா். காவல் துறையினரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் தடியடி நடத்தி பாஜகவினரை கலைந்து போகச் செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த வன்முறை மாநில அரசின் துணையுடன் நடைபெற்றுள்ளதாக மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் விமா்தித்துள்ளாா். அரசமைப்புச் சட்டப் பிரிவு 167-இன்படி, வன்முறை தொடா்பாக தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, அறிக்கை அனுப்புமாறு மம்தாவுக்கு போஸ் உத்தரவிட்டுள்ளாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments