FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மாநிலத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறது பாஜக: ஹேமந்த் சோரன்!

நிழல் பிரசாரங்கள் மூலம் பாஜக மாநிலத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கின்றது..

13 நவம்பர் 2024, 2:04 pm
முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவியுடன்
பகிர்:

நிழல் பிரசாரங்களின் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் பாஜக செயல்படுவதாக முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜாா்க்கண்டில் முதல்கட்டமாக 43 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று (நவ.13) தோ்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் முதல்கட்டமாக 43 இடங்களில் இன்றும், மீதமுள்ள தொகுதிகளில் நவம்பர் 20-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில், அந்த மாநில முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பர்ஹைட் தொகுதி வேட்பாளருமான ஹேமந்த சோரன், அவரது மனைவி கல்பனா சோரன் இருவரும் ராஞ்சியில் உள்ள வாக்குச் சாவடியில் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.

Advertisement

Advertisement

தேர்தல் குறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நிழல் பிரசாரங்கள் மூலம் பாஜக மாநிலத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கின்றது. பல்வேறு சமூக ஊடக தளங்களில் கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து வருகிறது.

மேலும், மாநிலத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக்கு எதிராகப் பிரசாரம் செய்ய 95,000 வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.