மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் விரைவில் மாறுகிறது! என்ன பெயர்?
மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் விரைவில் மாறுகிறது, என்ன பெயர் சூட்டப்படும் என்பது பற்றி..
மேற்கு வங்கம் என்ற மாநிலத்தின் பெயரை விரைவில் பஷ்சிம் வங்கா என்று பெயர் மாற்றம் செய்வதற்கான சட்ட மசேோதா பேரவையில் விரைவில் கொண்டு வரப்படும் என்று பாஜக மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த தகவலை தெரிவித்தார்.
மேற்கு வங்கம், வங்கம், வங்கா என்பது போன்ற பெயர்கள் இனி பயன்பாட்டில் இருக்காது என்ற கடந்த வாரம் பேசிய சமிக் பட்டாச்சார்யா கூறியிருந்த நிலையில், மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே இது தொடர்பான சட்ட மசோதா கொண்டு வரப்படும் என்று கூறியிருக்கிறார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.