FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நில மோசடி வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக ஹேமந்த் சோரனுக்கு கெடு!

ஹேமந்த் சோரனுக்கு நீதிமன்ற உத்தரவு பற்றி..

19 செப்டம்பர் 2026, 2:08 pm IST
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்
பகிர்:

நில மோசடி தொடர்பான வழக்கில் ராஞ்சியில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் செப். 21 மாலை 4 மணிக்குள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமலாக்கத் துறையால் விசாரிக்கப்படும் பணமோசடி வழக்கில் முதல்வர் சோரன் மீது முறையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவிருந்தன. இருப்பினும் பணிச்சுமை காரணமாக ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராகவில்லை. இதனால் அவரது வழக்குரைஞர் வேறு தேதியை ஒதுக்குமாறு கோரினார்.

இக்கோரிக்கையை பரிசீலித்த எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு அவகாசம் அளித்தாலும், செப்டம்பர் 21 திங்கள்கிழமை மாலை 4:00 மணிக்குள் அவர் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, முதல்வர் நேரில் அல்லது காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.

விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை கோரி சோரன் தாக்கல் செய்த இடைக்கால மனுவை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த மறுநாளே இந்த ஒத்திவைப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments