FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜனநாயக திருவிழாவில் முழு ஆர்வத்துடன் வாக்களியுங்கள்: பிரதமர் மோடி!

ஜனநாயக திருவிழாவில் முழு ஆர்வத்துடன் வாக்களியுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Updated On : 13 நவம்பர் 2024, 8:24 am IST
பிரதமர் மோடி (கோப்புப் படம்)
பகிர்:

ஜனநாயக திருவிழாவில் முழு ஆர்வத்துடன் வாக்களியுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜார்க்கண்டில் உள்ள 43 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. முன்னாள் முதல்வர் சம்பயி சோரன், முன்னாள் எம்பி கீதா கோரா உள்பட மொத்தம் 683 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement

15 மாவட்டங்களில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இன்று ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த ஜனநாயகத் திருவிழாவில் முழு ஆர்வத்துடன் வாக்களிக்குமாறு அனைத்து வாக்காளர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். முதன்முறையாக வாக்களிக்கப் போகும் இளம் வாக்காளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments