முகப்பு
இந்தியா

தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் திடீர் ராஜிநாமா

தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

Updated On : 17 நவம்பர் 2024, 1:34 pm IST
கைலாஷ் கெலாட்(கோப்புப்படம்)
பகிர்:

தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான கைலாஷ் கெலாட் தனது ராஜிநாமா கடிதத்தில், கட்சி எதிர்கொள்ளும் சமீபத்திய சர்ச்சைகள் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்குப் பதிலாக, ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த கொள்கைக்காக போராடுவதில் மும்முரமாக இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

நோயாளியின் கண்ணைத் தின்ற எலி? மருத்துவர்கள் அலட்சியம்!

ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எழுதிய கடிதத்தில், ஆம்ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஆம் ஆத்மியில் இருந்து விலகிய கைலாஷ் விரைவிலேயே பாஜகவில் இணையலாம் என தகவல்கள் தெரியவந்துள்ளன.

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள நிலையில் ஆம் ஆத்மியில் இருந்து மூத்த தலைவர் கைலாஷ் கெலாட் விலகியிருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments