FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வயநாடு: தொடர்ந்து பிரியங்கா முன்னிலை!

பிரியங்கா காந்தி வதேரா 1.8 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

23 நவம்பர் 2024, 10:47 am
வயநாட்டில் பிரியங்கா முன்னிலை
பகிர்:

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இன்று காலை 10.33 மணி நிலவரப்படி, பிரியங்கா காந்தி 1,65,487 வாக்குகள் பெற்றுள்ளார்.

சத்யன் மெகோரியை விட சுமார் 1.8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலையில் உள்ளார்.

Advertisement

Advertisement

நவம்பர் 13ல் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியுள்ளது.

இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளிலேயே தேசிய அளவில் கவனக்குவிப்பு பெற்ற தொகுதியாக மாறியது கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல்.

2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் வேட்பாளராக களமிறங்கிய ராகுல் காந்தி, உத்தர பிரதேச மாநிலம் ரே பரேலியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரு தொகுதிகளிலும் வென்ற ராகுல் காந்தி, ரே பரேலி மக்களவைத் தொகுதியை தக்கவைத்துக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பெற்றார். அவர் வயநாடு மக்களவைத் தொகுதியின் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.