முகப்பு
இந்தியா

ஆராய்ச்சி படிப்புகளுக்காக ரூ.6,000 கோடியில் புதிய திட்டம் -மத்திய அரசு ஒப்புதல்

ஆராய்ச்சி படிப்புகளுக்காக ரூ.6,000 கோடியில் புதிய திட்டம் -மத்திய அரசு ஒப்புதல்

Updated On : 25 நவம்பர் 2024, 9:56 pm IST
பகிர்:

ஆராய்ச்சி படிப்புகள் தொடர்பான ஆய்விதழ்கள், கட்டுரைகளை உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எளிதில் படித்து பயன்பெறுவதற்காக ‘ஒரே நாடு, ஒரே சப்ஸ்கிரிப்சன்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. ரூ.6,000 கோடியில் செயல்படுத்தப்படவுள்ள இந்த புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று(நவ. 25) ஒப்புதல் அளித்துள்ளது.

‘ஒரே நாடு, ஒரே சப்ஸ்கிரிப்சன்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம், நாடெங்கிலும் ஆராய்ச்சிப் படிப்புகள் சம்பந்தப்பட்ட கட்டுரைகள், கல்வி இதழ்கள், புத்தகங்களை இணைய வழியில்(டிஜிட்டல்) படித்து பயன் பெற முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி படிப்புகளுக்கான கட்டுரைகளை இணைய வழியில் எளிதாக படிக்க வழி வகை செய்யப்பட்டும் உள்ளது.

இத்திட்டத்துக்காக அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ. 6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மத்திய, மாநில அரசுகளின் கீழ் செயல்படும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களும் இத்திட்டத்தால் பயனடையும்.

அந்த வகையில், 6,300 நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 1.80 கோடி மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் பொறுப்பை, மத்திய பல்கலைக்கழக மானியக் குழுவால்(யுஜிசி) பல்கலைக் கழகங்களுக்கு இடையே நூலகங்களை நிர்வகிக்க உருவாக்கப்பட்டுள்ள ‘தகவல் மற்றும் நூலக வலையம்(இன்ஃப்ளிப்நெட்)’ ஒருங்கிணைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி துறையின் ‘ஒரே நாடு, ஒரே சப்ஸ்கிரிப்சன்’ என்ற ஒருங்கிணைந்த தளத்தில், ஆராய்ச்சி படிப்புகளுக்கு தேவையான கட்டுரைகளை மேற்கண்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களும் பேராசிரியர்களும் படித்துக்கொள்ள முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.