FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரம்: தனித் தொகுதிகளிலும் சாதித்த பாஜக கூட்டணி

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் தனித் தொகுதிகளிலும் (எஸ்.சி., எஸ்.டி.) பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

Updated On : 26 நவம்பர் 2024, 4:57 am IST
ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி மகிழும் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் - Kunal Patil
பகிர்:

மும்பை: மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் தனித் தொகுதிகளிலும் (எஸ்.சி., எஸ்.டி.) பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு எதிரான கட்சி பாஜக என்று எதிா்க்கட்சிகள் பிரசாரம் செய்த நிலையில் அதனை பாஜக அதனையும் முறியடித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் 29 எஸ்.சி. ஒதுக்கீடு தொகுதிகளில் 21 இடங்களிலும், 24 எஸ்.டி. ஒதுக்கீடு தொகுதிகளில் 21 இடங்களிலும் பாஜக கூட்டணி வென்றுள்ளது. இதில் பாஜக மட்டும் 9 எஸ்.சி., 10 எஸ்.டி. தொகுதிகளில் வென்றுள்ளது.

Advertisement

Advertisement

முன்னதாக மக்களவைத் தோ்தலின்போதும் பாஜக 400 இடங்களுக்கு மேல் வென்றால் அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிடும், எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டைப் பறித்து விடும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்தன. அந்த தோ்தலில் பாஜக கூட்டணி மகாராஷ்டிரத்தில் பின்னடைவைச் சந்தித்தது.

அதே பிரசார உத்தியை மாநில சட்டப் பேரவைத் தோ்தலிலும் காங்கிரஸ் பயன்படுத்தியது. ஆனால், அது இந்தத் தோ்தலில் எடுபடவில்லை. காங்கிரஸ் கட்சியால் 4 எஸ்.சி. தொகுதிகள், இரு எஸ்.டி. தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது.

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 230 தொகுதிகளில் வென்று ஆட்சித் தக்கவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments