FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சாக்குப்பையில் பெண்ணின் சடலம்: மும்பையில் பரபரப்பு!

விரைவுச்சாலை அருகே சாக்குப்பையில் கிடந்த சடலத்தால் பரபரப்பு..

Updated On : 26 நவம்பர் 2024, 1:53 pm IST
பகிர்:

மும்பை-புணே விரைவுச்சாலை அருகே சாக்குப்பையில் அடைக்கப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஷிர்கான் பாடா பகுதியைத் தூய்மைத் தொழிலாளர்கள் சாலையைச் சுத்தம் செய்யும்போது சாக்குப்பை ஒன்று இருப்பதைக் கண்டுள்ளனர். இதையடுத்து அதைத் திறந்துபார்த்தபோது பையில் ஒரு உடல் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சாக்குப்பையைத் திறந்துபார்த்தபோது அதில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல், இரண்டு சாக்குகளில் அடைக்கப்பட்டு, அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள புதர்களில் வீசப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Advertisement

Advertisement

முதற்கட்ட தகவல்களின்படி, பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் உடல் சிதைவடையத் தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்தனர். இறந்த பெண்ணின் அடையாளத்தைக் கண்டறியச் சம்பவ இடத்தில்

எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சடலம் கிடைத்த மற்றம் அதன் பக்கத்தில் ஏதேனும் பெண் காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டதா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments