முகப்பு
இந்தியா

கனடாவில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்!

விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. கனடாவில் அவசரமாக தரையிறக்கம்

இந்தியா

கனடாவில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்!

விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. கனடாவில் அவசரமாக தரையிறக்கம்

Updated On : 15 அக்டோபர், 2024 at 3:14 PM
பகிர்:

அமெரிக்காவின் சிகாகோவுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் கனடாவில் இன்று(அக்.15) அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

புது தில்லியிலிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு சிகாகோவுக்கு புறப்பட்டுச் சென்ற போயிங் ரக ‘ஏர் இந்தியா 127’ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விமானம் கனடாவின் இகுவாலிட் விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாலை 5.30 மணி நிலவரப்படி, இகுவாலிட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறதா என்பது குறித்து சோதனை தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் புறப்படும் நேரம் குறித்து அறிவிப்புகள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →