FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

போர்ச் சூழலால் தொடரும் வான்வெளித் தடைகள்: கடுமையான பாதிப்பில் ஏர் இந்தியா!

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் தொடர்ந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் வான்வெளி கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டை விட அதிக பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.

12 அக்டோபர் 2026, 11:00 pm IST
ஏர் இந்தியா விமானம் - ANI /File
பகிர்:

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் தொடர்ந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் வான்வெளி கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டை விட அதிக பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.

இதனால் நீண்டதூர விமானப் பாதைகள், அதிக எரிபொருள் பயன்பாடு மற்றும் செலவுகள் அதிகரித்துள்ளதாக ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய விமான நிறுவனங்கள் தங்களின் வான்வெளியைப் பயன்படுத்தக்கூடாது என பாகிஸ்தான் தங்களது வான்வெளியை மூடியதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான தனது விமான சேவைகளை நீண்ட தூர வான்வெளிப் பாதைகள் மூலம் செயல்படுத்தி வருகிறது.

Advertisement

Advertisement

அதேநேரம், மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள மோதல்கள் காரணமாக பல வளைகுடா நாடுகள் விதித்துள்ள கட்டுப்பாடுகளால் இந்தச் சுமை மேலும் அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாகப் பேசிய ஏர் இந்தியா மூத்த அதிகாரி ஒருவர், "இதன் தாக்கம் மிகப் பெரியது. அதைத் துல்லியமாக அளவிடுவது கடினம். தற்போது பாகிஸ்தான் மட்டுமின்றி, ஈரானின் போர்ச்சூழலும் இதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல நாடுகளின் வான்வெளிகள் மூடப்படும்போது, ​​விமானங்கள் தெற்கு பகுதியில் செல்ல வேண்டிய தூரம் அதிகரிக்கிறது. விமானங்கள் எவ்வளவு தூரம் தெற்கு நோக்கிச் செல்கின்றனவோ, அந்தளவுக்கு எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. இதனால், கடந்த ஆண்டை விட தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது" என்று அவர் கூறினார்.

நீண்ட தூரப் பயணம் என்பது கூடுதல் பறக்கும் நேரம் மற்றும் அதிக எரிபொருள் பயன்பாட்டைக் குறிக்கிறது. அதேநேரம். சில விமானங்களுக்கு இடைநிறுத்தங்கள் தேவைப்படும் நிலையில், தரையிறங்குவதற்கான கட்டணம் போன்ற செலவுகளும் உள்ளன. இதனால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள மொத்த நிதி ரீதியான பாதிப்பை உடனடியாகக் கணிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

ஈரான் மற்றும் அந்தப் பிராந்தியத்தில் வான்வெளியைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்தியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா இடையே இயங்கும் விமான நிறுவனங்களுக்குக் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

summary

Airspace restrictions persist due to the war situation: Air India severely affected!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments