FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராணுவ வாகனம் மீது தீவிரவாத தாக்குதல்! 2 வீரர்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு!

ஜம்மு- காஷ்மீரின் குல்மார்க்கில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 24 அக்டோபர் 2024, 9:42 pm IST
பகிர்:

ஜம்மு- காஷ்மீரின் குல்மார்க்கில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு - காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மார்க் அருகே உள்ள போடாபத்ரி கிராமத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குல்மார்க்கிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதி, ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்பகுதியில் பொதுமக்கள் நடமாடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், “இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ராணுவ வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள், ராணுவப் பொருள்களை எடுத்துச் செல்லும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் (ஆர்மி போர்ட்டர்) என 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தனர்.

முன்னதான, ககாங்கிரில் உள்ள கட்டுமான நிறுவன ஊழியர்கள் தங்கியிருந்த இடத்தில் தீவிரவாதிகள் 7 பேரை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments