FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

புலி வேடமணிந்த வங்கதேச ரசிகரை அடித்து உதைத்த இந்திய அணி ரசிகர்கள்!

புலி வேடமணிந்த வங்கதேச ரசிகரை இந்திய அணி ரசிகர்கள் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 செப்டம்பர் 2024, 3:50 pm IST
டைகர் ராபி
பகிர்:

புலி வேடமணிந்த வங்கதேச ரசிகரை இந்திய அணி ரசிகர்கள் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியைக்காண வங்கதேசத்தில் இருந்து ‘சூப்பர் ஃபேன்’ டைகர் ராபி என்பவர் புலி வேடமணிந்து வந்துள்ளார். இந்திய அணி ரசிகர்கள் அவரிடம் இருந்து வங்கதேச கொடியைப் பிடுங்கி எறிந்து விட்டு அவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த ராபியை காவல்துறையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Advertisement

Advertisement

நெய் என நாம் சாப்பிடுவது எல்லாம் நெய்தானா?

இந்தச் சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்க நிர்வாகி கூறுகையில், “டைகர் ராபி புலி வேடம் அணிந்து வந்து சி ஸ்டாண்டில் அமர்ந்திருந்ததாகவும், அவரிடம் இந்திய அணிகள் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறினார். ஆனால், அவரை அடித்ததற்கான எந்த விவரமும் தெரியவில்லை” என்றார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், “டைகர் ராபி சி ஸ்டாண்டின் பால்கனியில் புலி வேடம் அணிந்து இந்திய அணி பற்றி கோஷமிட்டதால் ரசிகர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்கள் அவரது வயிற்றிலும் குத்தி காயப்படுத்தியுள்ளனர்.

கண்டெய்னர் லாரியில் தப்பிய கொள்ளையர்கள்! நாமக்கல் போலீஸ் என்கவுன்டர்!

வலியால் துடித்த அவரை பால்கனியில் இருந்த காவலர் மீட்டு ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். இருப்பினும், அவருக்கு மைதானத்தில் இருந்தவர்கள் மூலம் முதலுதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை” என்றார்.

தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ராபியும் இந்திய ரசிகர்கள் மீது குற்றச்சாட்டு வைத்ததன் பேரில் காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் அருகே பிடிபட்ட கண்டெய்னர் லாரி: பவாரியா பாணியில் கொள்ளைக் கும்பல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments