மத்தியப் பிரதேசம்: பெண்களுக்கான உதவி தொகை 9-வது தவணை விடுவிப்பு
மத்தியப் பிரதேச முதல்வர் மகளிருக்கான உதவித் தொகையைச் சனிக்கிழமை விடுவித்தார்.
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் புதன்கிழமை மாநிலத்தில் மகளிருக்கான உதவித் தொகை பெறும் 1.29 கோடி பயனாளிகளுக்கு ரூ.1,576 கோடிக்கான உதவித் தொகையை விடுவித்தார்.
மேலும் பழங்குடி மக்கள் வாழும் பகுதியான மண்ட்லாவில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி அமைக்கவிருக்கும் அரசின் திட்டத்தை அறிவித்தார்.
மகளிருக்கான உதவி தொகை மாதம் ரூ.1,250/- அளிக்கும் மாநில அரசின் திட்டத்தில் இது 9-வது தவணை.
Advertisement
Advertisement
முன்னாள் பாஜக முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகான் தொடங்கி வைத்த திட்டம் நவம்பர் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு பெரும் கை கொடுத்தது. மீண்டும் அமைந்த பாஜக ஆட்சியில் அந்த திட்டம் தொடர்கிறது.
இந்த நிலையில் ரூ.1,576 கோடி மட்டுமில்லாமல் ரூ.340 கோடி ஓய்வூதிய பயனாளிகள் 56 லட்சம் பேரின் கணக்குகளில் வரவு வைக்க விடுவித்தார்.
இதையும் படிக்க: அபுதாபியில் முதல் இந்து கோயில்: திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
மேலும், ஆயுர்வேத கல்லூரிக்கான அடிக்கல்லை நாட்டினார். ரூ.134.53 கோடி திட்ட மதிப்பில் இந்தக் கல்லூரி அமையவுள்ளது.
இது தவிர, ரூ.14.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் தொடங்கி வைத்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.