மோசமான வானிலை:டாக்காவுக்கு திருப்பிவிடப்பட்ட விமானம்மீண்டும் குவாஹாட்டி வந்தது
மும்பையில் இருந்து குவாஹாட்டிக்கு சென்ற விமானம், மோசமான வானிலை காரணமாக வங்கதேசத் தலைநகா் டாக்காவுக்கு திருப்பிவிடப்பட்டு, பின்னா் அங்கிருந்து மீண்டும் குவாஹாட்டியை வந்தடைந்தது.
மும்பையில் இருந்து குவாஹாட்டிக்கு சென்ற விமானம், மோசமான வானிலை காரணமாக வங்கதேசத் தலைநகா் டாக்காவுக்கு திருப்பிவிடப்பட்டு, பின்னா் அங்கிருந்து மீண்டும் குவாஹாட்டியை வந்தடைந்தது.
இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இருந்து அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டிக்கு வெள்ளிக்கிழமை இரவு 11.20 மணிக்கு புறப்பட்டது.
Advertisement
Advertisement
ஆனால், குவாஹாட்டி விமான நிலையத்தில் நிலவிய அடா் பனிமூட்டம் காரணமாக, அங்கு விமானம் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து, அந்த விமானத்தை மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அல்லது ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்துக்கு திருப்பிவிட பரிசீலிக்கப்பட்டது.
கொல்கத்தா விமான நிலையத்திலும் மோசமான வானிலை நிலவியது. ஒடிஸா விமான நிலையத்தில் ஓடுபாதை மூடல் காரணமாக அங்கும் விமானம் தரையிறங்க முடியாத நிலை காணப்பட்டது. இதையடுத்து, வங்கதேச தலைநகா் டாக்காவுக்கு அந்த விமானம் திருப்பிவிடப்பட்டது.
இந்நிலையில், வங்கதேச நேரப்படி சனிக்கிழமை காலை 10.54 மணியளவில் டாக்காவில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம், குவாஹாட்டியை வந்தடைந்ததாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.
மும்பையில் இருந்து குவாஹாட்டிக்கு சுமாா் 3 மணிநேரத்தில் வர வேண்டிய விமானம், சுமாா் 12 மணிநேரத்துக்கு பிறகு குவாஹாட்டியை வந்தடைந்தது.