ஆஎஸ்எஸ், பாஜக நாட்டில் வன்முறையைப் பரப்புகின்றன: ராகுல்
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் சிந்தனைகள் நாட்டில் வன்முறையையும், வெறுப்பையும் பரப்பி வருவதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் சிந்தனைகள் நாட்டில் வன்முறையையும், வெறுப்பையும் பரப்பி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் கிழக்கில் இருந்து மேற்காக 6,713 கி.மீ. தொலைவுக்கு ராகுல் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மணிப்பூரில் இருந்து கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய இப்பயணம், மேற்கு வங்கத்தை கடந்த 25-ஆம் தேதி எட்டியது.
2 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு இம்மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் தனது பயணத்தை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கினார் ராகுல்.
Advertisement
Advertisement
ஞாயிற்றுக்கிழமை சிலிகுரி அருகே நிறைவடைந்த அவரது பயணம், திங்கள்கிழமை கிஷன்கஞ்ச் வழியாக பிகாா் மாநிலத்துக்குள் நுழைந்தது.
படிக்க: நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு!
அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பல்வேறு மதங்கள் மற்றும் சாதிகளைச் சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர்.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் சிந்தனைகள் நாட்டில் வன்முறையையும் வெறுப்பையும் பரப்பி வருகின்றன என்று அவர் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.