சாதிவாரி கணக்கெடுப்பு: கர்நாடகத்தில் ஏப்.17 அமைச்சரவை கூட்டம்
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனை..
பெங்களூரு: கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை வரும் ஏப். 17-ஆம் தேதி கூடி ஆலோசனை நடத்துகிறது.
கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் முழு அறிக்கையை முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை விரைவில் பொதுவெளியில் வெளியிடப்பட உள்ளது.
இந்த நிலையில், அதற்கு முன்னதாக நடைபெறும் இந்த சிறப்பு ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
Advertisement
நாட்டிலேயே முதல் மாநிலமாக, காங்கிரஸ் ஆளுங்கட்சியாக உள்ள தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதிலுள்ள விவரங்கள் வெளியிடப்பட்டுவிட்டன. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது மாநிலமாக கர்நாடகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.