கர்நாடகத்தில் வெகுவிரைவில் அமைச்சரவை விரிவாக்கம்: அமைச்சர் ராமலிங்க ரெட்டி
கர்நாடகத்தில் வெகுவிரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று மூத்த அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
கர்நாடகத்தில் வெகுவிரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று மூத்த அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக் கிழமை கூறியது: கர்நாடக அமைச்சரவை வெகுவிரைவில் விரிவாக்கம் செய்யப்படும்.
ஆகஸ்ட் மாதம் சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. அதற்குள் அமைச்சர வையை விரிவாக்கம் செய்ய வேண்டியது அவசியம். சட்டப்பேரவை கூடுவதற்குள் முழு அமைச்சரவை பதவியேற்றிருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
20-க்கும் மேற்பட்ட துறைகளை முதல்வர் டி.கே.சிவகுமார் தன்வசம் வைத்திருக்கிறார். அதனால் புதிய அமைச்சர்களை நியமித்து, துறைகளை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றார் அவர். அமைச்சரவையில் காலியாக உள்ள 20 இடங்களைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்தஎம்எல்ஏக்களிடையே கடும்போட்டி காணப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.