FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி

கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை என அம்மாநில அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளது பற்றி...

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 4:54 pm IST
கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி. - கோப்புப் படம்
பகிர்:

கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை என அம்மாநில அமைச்சர் ராமலிங்க ரெட்டி, செவ்வாய்க்கிழமை (ஆக. 18) தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாக குற்றச்சாட்டி, அப்பகுதியைச் சேர்ந்த 3 தமிழர்களை கர்நாடக வனத்துறையினர் கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்தனர்.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக. 18) கர்நாடகத்தின் வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி பேசியதாவது:

இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை. தமிழர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழி பேசும் மக்கள் கர்நாடகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியா முழுவதிலும் உள்ள பகுதியிலிருந்து மொழி வேறுபாடின்றி பெங்களூரில் மக்கள் வசிக்கின்றனர். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நீதித்துறை சார்பில் விசாரணை நடத்தப்படுகிறது. அதன் அறிக்கை வரும் ஆக. 21 அல்லது 22 ஆம் தேதி சமர்ப்பிக்கப்படும். அதற்குப் பிறகுதான், நாங்கள் உரிய நடவடிக்கையை எடுப்போம். எங்கள் அதிகாரிகள் தவறு செய்திருந்தால், அவர்கள் மீதும் நான் நடவடிக்கை எடுப்பேன் என்று ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

summary

Regarding the issue of Tamils ​​being killed in Karnataka, state minister Ramalinga Reddy stated on Tuesday (August 18) that it is a matter concerning his state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments