FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தாணே: துறவி போல் வேடமிட்டு தங்கச் சங்கிலியை திருடிய கும்பல்

தாணேவில் துறவி போல் வேடமிட்டு முதியவரிடம் தங்கச் சங்கிலியை திருடிய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Updated On : 18 ஏப்ரல் 2025, 7:43 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

தாணேவில் துறவி போல் வேடமிட்டு முதியவரிடம் தங்கச் சங்கிலியை திருடிய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், டோம்பிவலியில் 75 வயது முதியவரிடம் இருந்து ரூ.1.2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மூன்று பேர் திருடியதாகக் கூறப்படுகிறது.

அவர்களில் ஒருவர் துறவி போல உடையணிந்திருந்தார் என்று தாணே போலீஸ் அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இந்தச் சம்பவம் புதன்கிழமை கோனிபலாவாவில் நடந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி தெரிவித்ததாவது, மூன்று பேரும் காரில் இருந்து இறங்கி, பாதிக்கப்பட்ட மாதவ் ஜோஷியை ஆசீர்வதிக்க அவரை நிறுத்தினர்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு 22 மாவட்டங்களில் மழை!

பின்னர் மதப் பிரச்னைகள் குறித்து அவருடன் உரையாடலில் ஈடுபட்டிருந்தபோது, ​​மூவரும் அவரது ரூ.1.2 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலி மற்றும் மோதிரத்தை திருடினர்.

தன்னுடைய நகை திருடப்பட்டதை ஜோஷி உணரும் முன்பே காரில் வேகமாக தப்பி ஓடிவிட்டனர் என்றார்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் குஜராத், புணே மற்றும் சோலாபூரில் வசிப்பவர்கள் என்றும் 24 மணி நேரத்திற்குள் அவர்கள் பிடிபட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments