FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்: மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

26 ஏப்ரல் 2025, 11:35 pm IST
தேவேந்திர ஃபட்னவீஸ்
பகிர்:

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.

அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மகாராஷ்டிர மாநிலம் புணேவைச் சோ்ந்த கெளஸ்துப் கன்போட்டே, சந்தோஷ் ஜக்டலே ஆகியோரும் கொல்லப்பட்டனா்.

அவா்களின் குடும்பத்தினரை மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா். இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தானிகள் விரைவில் கண்டறியப்படுவா். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் குடிமக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரத்தில் அனுமதியின்றி நீண்ட நாள்களாக தங்கியிருக்கும் பாகிஸ்தானிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

Advertisement

Advertisement

பாகிஸ்தானை சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட், பஹல்காமில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடா்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானிகள் குறித்த காலத்துக்குள் வெளியேற்றப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில முதல்வரிகளிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments