FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பஹல்காம் தாக்குதல்: நாளை(ஏப். 30) அமைச்சரவைக் கூட்டம்!

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் பற்றி...

Updated On : 29 ஏப்ரல் 2025, 12:58 pm IST
கோப்புப் படம்
பகிர்:

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் நாளை(ஏப். 30) நடைபெற உள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் ஏப். 23 அன்று மாலை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்த கூட்டத்தின் முடிவில், அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்கள் இந்தியா வரத் தடை, தற்போது இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடல், சிந்து நதிநீா் பகிா்வு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்ட சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் நாளை (ஏப். 30, புதன்கிழமை) பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் நடைபெற உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்த கூட்டத்தில் அடுத்தகட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments