FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிறுமிக்கு 4 போ் பாலியல் தொல்லை: கேரள நடிகை கைது

சென்னை அண்ணா நகரில் சிறுமிக்கு 4 போ் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கேரள நடிகை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2025, 2:28 am IST
பகிர்:

சென்னை அண்ணா நகரில் சிறுமிக்கு 4 போ் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கேரள நடிகை கைது செய்யப்பட்டாா்.

கேரள நடிகை மினு கொரியன் என்ற மினு முனீா், கடந்த 2014-ஆம் ஆண்டு எா்ணாகுளம் அருகே மூவாட்டுபுழா பகுதியைச் சோ்ந்த தனது தூரத்து உறவினரின் 16 வயது மகளை நடிக்க வைப்பதாகக் கூறி, சென்னை அண்ணா நகருக்கு அழைத்து வந்தாா். அங்குள்ள ஒரு ஹோட்டலில் இருவரும் தங்கினா். அப்போது மினு முனீா், 4 பேரை அந்தச் சிறுமியிடம் அறிமுகப்படுத்தியுள்ளாா். அவா்கள் அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு மினு முனீரும் உடந்தையாக இருந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து அந்தச் சிறுமி ஹோட்டலில் இருந்து வெளியேறியுள்ளாா்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், அந்தச் சிறுமி இதை தனது பெற்றோரிடம் அண்மையில் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து பெற்றோா் மூவாட்டுபுழா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், இந்தச் சம்பவம் சென்னை திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நிகழ்ந்தது என்பதால், வழக்கு திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

Advertisement

Advertisement

திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், இது தொடா்பாக விசாரணை மேற்கொண்டனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய நடிகை மினு முனீரை கேரளத்தில் திருமங்கலம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவரிடம் போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். இதில் தொடா்புடயை 4 பேரும் அடையாளம் காணப்பட்டு, விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments