முகப்பு
இந்தியா

விமான சேவை பாதிப்பு! கட்டணங்களை திருப்பி அனுப்ப மத்திய அரசு கெடு!

ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான கட்டணங்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு இண்டிகோ நிறுவனத்துக்கு மத்திய அரசு கெடு

Updated On : 6 டிசம்பர் 2025, 3:55 pm IST
விமான நிலையங்கள்
பகிர்:

ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான கட்டணங்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு இண்டிகோ நிறுவனத்துக்கு மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

விமானிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் கட்டாய ஓய்வு விதியால், இண்டிகோ விமான நிறுவனத்தில் ஊழியர்களின் பற்றாக்குறை ஏற்பட்டு கடந்த சில நாள்களாக விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், இன்றும் 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான கட்டணங்களை பயணிகளுக்கு நாளை (டிச. 7) இரவு 8 மணிக்குள் திருப்பிச் செலுத்துமாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், பயணிகளின் லக்கேஜ்-களை இரு நாள்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றுன் இண்டிகோ நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: விமானத் துறை 2 நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் துறையாக மாறிப் போனது ஏன்?: ப. சிதம்பரம்

summary

Govt asks IndiGo to complete refund process for cancelled flights by Sunday evening

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments