இந்தியா மற்றும் வங்கதேசம் இடையில் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் பரிமாற்றத்தின் மூலம் 47 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இருநாடுகளின் அரசுகளும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மனிதநேயத்தின் அடிப்படையில் விடுவித்து அவரவர் தாயகங்களுக்குச் செல்ல அனுமதித்து வருகின்றன.
இந்த நிலையில், சிறைப்பிடிக்கப்பட்ட 47 இந்திய மீனவர்களை வங்கதேச அரசு இன்று (டிச. 9) விடுவித்துள்ளது. இதேபோல், 38 வங்கதேச மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை இந்திய அதிகாரிகள் விடுவித்துள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் இந்தியாவுடனான உறவுகள் விரிசலடையத் துவங்கியுள்ளன.
இருப்பினும், கடந்த ஜனவரி மாதம் இருநாடுகளின் அரசுகளும் 95 இந்திய மற்றும் 90 வங்கதேச மீனவர்களை விடுதலைச் செய்து தாயகங்களுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தோனேசியா அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து! 22 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.