FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,554 கோடி பேரிடர் நிவாரண நிதி! தமிழகம், கேரளத்துக்கு பூஜ்யம்!

மத்திய அரசு கூடுதலாக ரூ.1,554 கோடி பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்கியிருக்கிறது.

Updated On : 19 பிப்ரவரி 2025, 12:11 pm IST
அமித் ஷா
பகிர்:

கடந்த 2024ஆம் ஆண்டு புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஐந்து மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1,554.99 கோடியை பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு கடும் சேதங்களை ஏற்படுத்திய ஃபெஞ்சால் புயல் நிவாரணமாக ரூ.37 ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசு கோரியிருந்த நிலையில், தமிழகத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

அதுபோல, வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கும் கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆறு மாநிலங்களுக்கு ரூ.1,554.99 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.

அதாவது இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட ஆந்திரம், ஒடிசா, தெலங்கானா, நாகாலாந்து, திரிபுரா, தெலங்கானா மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1554.99 கோடி பேரிடர் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இது குறித்து அமித் ஷா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், இன்று மத்திய அமைச்சரவையின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் கூடுதல் மத்திய அரசின் உதவியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ஆந்திரம், நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு 1554.99 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது ஏற்கனவே ரூ. 18,322.80 கோடியை மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 27 மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிலையில், இது கூடுதல் நிதியாகும் என்று பதிவிட்டுள்ளார்.

இதன்படி, ஆந்திர மாநிலத்துக்கு ரூ.608.08 கோடி, நாகாலாந்துக்கு ரூ.170.99 கோடி, ஒடிசா மாநிலத்துக்கு ரூ.225.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்துக்கு ரூ.231.75 கோடி, திரிபுராவுக்கு ரூ.288.93 கோடி கூடுதல் நிதி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments