முகப்பு
இந்தியா

இசையமைப்பாளர் தாமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது!

மலையாள இசையமைப்பாளர் தாமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.

Updated On : 14 ஜனவரி 2025, 5:22 pm IST
பகிர்:

சபரிமலையில் மகரவிளக்கு தினத்தில் மலையாள இசையமைப்பாளர் கைப்பிரதம் தாமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.

ஹரிவராசனம் விருது கேரள அரசும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து நிறுவிய விருதாகும். இசையின் மூலம் சபரிமலை சமயச் சார்பின்மை, சமத்துவம், உலகளாவிய சகோதரத்துவம் ஆகியவற்றைப் பரப்பும் பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.

திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, ஏராளமான ஐயப்ப பக்தி பாடல்களையும் கைதப்பிரம் தாமோதரன் நம்பூதிரி எழுதி இசையமைத்துள்ளார். விருது வழங்கும் விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பிகே.சேகர் பாபுவும் கலந்துகொண்டு விருதினை வழங்கினார்.

Advertisement

Advertisement

ஹரிவராசனம் விருது 2012 ஆம் ஆண்டு கேரள அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முதல் விருது ஹரிவராசனம் பாடல் பாடிய பிரபல பாடகர் ஜேசுதாஸுக்கு வழங்கப்பட்டது.

2021-ல் தமிழ்ப் பின்னணிப் பாடகர் வீரமணி ராஜுவுக்கும், 2022-ல் பாடலாசிரியரும் இசையமைப்பாளருமான அழப்பு ரங்கநாதனுக்கும், 2023 ஆம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது பாடலாசிரியர், இயக்குனர் மற்றும் நாவலாசிரியர் ஸ்ரீகுமரன் தம்பிக்கும், கடந்த ஆண்டு பி.கே.வீரமணி தாஸுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments