FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஒரே நேரத்தில் 3 போர்க்கப்பல்கள்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

ஒரே நேரத்தில் 3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.

Updated On : 15 ஜனவரி 2025, 12:31 pm IST
பகிர்:

இந்திய கப்பற்படைக்கு மேலும் வலுகூட்டும் வகையில், ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் போர்க்கப்பல்களை நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.

இந்த மூன்று போர்க் கப்பல்களும் நாட்டின் பாதுகாப்புப் படையில் இணைக்கப்பட்டிருப்பது, நாட்டின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியிலும், கடற்படை பாதுகாப்பிலும் மிக முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரே நேரத்தில், ஒரு தாக்கி அழிக்கும் திறன்கொண்ட போர்க் கப்பல், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் போன்றவை ஒன்றாக கப்பற்படையில் இணைக்கப்படுவது இதுவே முதல் முறை. இதில் மேலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மூன்றுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்று மும்பையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி பேசினார்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியின்போது, மூன்று முக்கிய போர்க் கப்பல்கள், கப்பற்படையில் அர்ப்பணிக்கப்பட்டதை ஒரு வரலாற்று நிகழ்வு என்று கடற்படை பெருமிதத்துடன் விளக்கியிருக்கிறது.

அதாவது, போர்க்கப்பல்கள் உருவாக்கத் திட்டம் 17ஏ-வின்படி தயாரிக்கப்பட்டதில் முன்னணிக் கப்பலாக ஐஎன்எஸ் நீலகிரி விளங்குகிறது. ஷிவாலிக் வகையைச் சேர்ந்த போர்க் கப்பல்களைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க நவீன தொழில்நுட்பங்கள் ஐஎன்எஸ் நீலகிரியில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டு, மும்பையில் உள்ள மஸாகன் கப்பல் கட்டும் தளத்தில் இந்தக் கப்பல்கள் தயாரிக்கப்பட்டன. இது மேம்பட்ட கடற்படை வீரர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் தொழில்நுட்பம், கப்பலின் பாதுகாப்பை உறுதி செய்வது, அதேவேளையில், ரகசியமான கண்காணிப்புகளை மேற்கொள்ளும் வகையில் மேம்பட்ட அம்சங்களை உள்ளடக்கியது, இது அடுத்த தலைமுறை உள்நாட்டு போர்க்கப்பல்களையே பிரதிபலிக்கிறது என்று புகழ்ந்துரைத்துள்ளது கப்பற்படை.

இதன் ரகசியத் தன்மையும், ரேடார்களின் வலையில் சிக்காமல் தவிர்க்கும் தன்மையும்தான் இதன் சிறப்பம்சங்கள்.

இது நவீன விமான இயங்குதள வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எம்எச்-60ஆர் உள்பட பல வகை ஹெலிகாப்டர்களை இந்த போர்க்கப்பலிலிருந்து இயக்க முடியும். ஐஎன்எஸ் சூரத், போர்க்கப்பல் கட்டும் திட்டம் 15ன் கீழ் உருவாக்கப்பட்ட நான்காவது மற்றும் இறுதிக் கப்பல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments