மல்லிகார்ஜுன கார்கே  கோப்புப் படம்
இந்தியா

பெண்களைக் காப்பதற்கு பதிலாக குற்றவாளிகளைக் காக்கிறது பாஜக!

பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 43 வழக்குகள் பதிவாவது ஏன்? கார்கே கேள்வி.

DIN

நாட்டில் பாதிக்கப்பட்ட பெண்களைக் காப்பதற்கு பதிலாக குற்றவாளிகளைக் காக்கும் செயல்களில் பாஜக ஈடுபடுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

நாட்டில் உள்ள பெண்களைக் காப்போம்; பெண்களுக்கு கல்வி அளிப்போம் என்ற ஹரியாணா அரசின் திட்டம் செயல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது.

ஹரியாணா மாநிலம் பானிபட்டில் பெண்களைக் காப்போம்; பெண்களுக்கு கல்வி அளிப்போம் என்ற திட்டத்தை 2015 ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். இத்திட்டம் தொடங்கி இன்றுடன் 10 ஆண்டுகளாகின்றன.

இந்நிலையில் இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

''பெண்கள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடியிடம் மூன்று கேள்விகளை எழுப்புகிறோம்.

பெண்களைப் பாதுகாப்போம் என்பதற்கு பதிலாக குற்றவாளிகளைப் பாதுகாப்போம் என்பதையே பாஜக பின்பற்றுவது ஏன்? மணிப்பூர் பெண்கள் நீதி பெறுவது எப்போது?

பட்டியலினத்தைச் சேர்ந்த ஹாத்ரஸ் பெண்ணோ, உன்னாவ் பகுதியைச் சேர்ந்த மகளோ, எங்கள் பெண் மல்யுத்த சாம்பியன்களோ... பாஜக குற்றவாளிகளையே பாதுகாப்பது ஏன்?

பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 43 வழக்குகள் பதிவாவது ஏன்?'' எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT