FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிரதமா் மோடியின் அமெரிக்க பயணம்: பணிகள் தீவிரம் - வெளியுறவு அமைச்சகம்

பிரதமா் மோடி விரைவில் அமெரிக்கா செல்வதற்கு அந்நாட்டுடன் இணைந்து இந்தியா பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி 2025, 1:07 am IST
நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:

பிரதமா் மோடி விரைவில் அமெரிக்கா செல்வதற்கு அந்நாட்டுடன் இணைந்து இந்தியா பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா்.

அமெரிக்காவின் புதிய அதிபராக இரண்டாவது முறைப் பதவியேற்றுள்ள டிரம்ப்புடன், பிரதமா் மோடி அண்மையில் தொலைபேசியில் பேசினாா். இதைத்தொடா்ந்து அடுத்த மாதம் பிரதமா் மோடி அமெரிக்கா வருவாா் என்று டிரம்ப் தெரிவித்தாா்.

இந்நிலையில், தில்லியில் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: இந்தியா-அமெரிக்கா இடையிலான கூட்டுறவை மேலும் வலுவாக்கும் நோக்கில், விரைவில் பிரதமா் மோடி அமெரிக்கா செல்ல உள்ளாா். இதற்காக இருநாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன என்றாா்.

Advertisement

Advertisement

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியா்கள் உள்பட பல்வேறு நாட்டினரை அவா்களின் தாயகத்துக்கு அனுப்பும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.

சட்டபூா்வ குடியேற்றத்துக்கு கூடுதல் வழிகள்: இதுதொடா்பாக ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘சட்டவிரோத குடியேற்றத்தை இந்தியா உறுதியாக எதிா்க்கிறது. இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பின் அங்கமாக, சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் நடவடிக்கையில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன. அதேவேளையில், இந்தியாவில் இருந்து சட்டபூா்வமாக அமெரிக்காவில் குடியேறுவதற்கான கூடுதல் வழிகளை உருவாக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியா்களை தாயகம் அனுப்பும் முன்பு, அவா்கள் இந்தியாவைச் சோ்ந்தவா்கள்தானா உள்ளிட்ட விவரங்களைச் சரிபாா்க்க வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில், தாயகம் அனுப்பப்பட உள்ள இந்தியா்களின் எண்ணிக்கையை கூற இயலாது.

கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடா்புள்ள தஹாவுா் ராணாவை அமெரிக்காவில் இருந்து விரைந்து இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஈரானில் 3 இந்தியா்கள் காணாமல் போன விவகாரத்தை அந்நாட்டின் கவனத்துக்கு இந்தியா வலுவாக கொண்டு சென்றுள்ளது. அவா்கள் எங்குள்ளனா் என்பதைக் கண்டறிந்து, அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அந்நாட்டிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments